Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரில்  நடந்த பயங்கரவாத தாக்குதலில்  5  வீரர்கள்  வீரமரணம்
, வெள்ளி, 5 மே 2023 (17:29 IST)
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில்  5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் கண்டி வனப்பகுதியில்  இன்று காலையில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,  பயங்கரவாதிகள் பதுக்கிவைத்திருந்த  வெடிகுண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில்,  5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு அதிகாரி உள்ளிட்ட  4 பேர் படுகாயமடைந்ததாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பிற்காக ரஜோரி மாவட்டத்தில், இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குப்பை கொட்டுவதில் தகராறு.... 6 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை