Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

Advertiesment
இந்தியா

Siva

, வியாழன், 22 மே 2025 (14:26 IST)
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவியிலிருந்து விலகி தலைமறைவான நிலையில் அவரின் ஆட்சி நேரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு போராட்டங்கள் பல மாதங்களாக நடைபெற்றன. பின்னர் முகம்மது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டது.
 
இந்த மாற்றத்துக்குப் பிறகு இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன. புதிய அரசு சீனாவுடன் நெருங்கிய உறவுகளை கட்டியெழுப்பி, 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
 
இந்தியா, சமீபத்தில் வங்கதேசத்திலிருந்து வரும் ரூ.6,600 கோடி  மதிப்பிலான இறக்குமதிகளைத் தடை செய்தது. இது வங்கதேசத்தின் இந்தியாவுக்கு வரும் இறக்குமதிகளில் 42% ஆகும். பதிலுக்கு வங்கதேசமும் இந்திய யார்ன், அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய மறுத்தது. அதோடு, இந்திய சரக்குகளை வங்கதேசம் வழியாக செல்வதற்கு ‘டிரான்ஸிட் கட்டணம்’ விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் வங்கதேச பாதுகாப்புத்துறை, இந்திய அரசின் GRSE நிறுவனத்துடன் மேற்கொண்ட ரூ.180 கோடி மதிப்பிலான கப்பல் வாங்கும் ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்துள்ளது. இது 61 மீ. நீளம், 15.8 மீ. அகலம் கொண்ட ஒரு நவீன கடல் பாதுகாப்பு கப்பல் ஆகும். இது 13 knots வேகத்தில் இயக்கப்படும் வகையில் 24 மாதங்களில் வழங்கப்படவிருந்தது.
 
இந்த நிகழ்வுகள், இந்தியா-வங்கதேச உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிக்கலான நிலையில் இருப்பதை காட்டுகின்றன.
 
இந்தியாவும் வங்கதேசமும் மாறி மாறி தடை செய்து வரும் நிலையில் இந்தியா பாகிஸ்தான் நிலைமையை விட இந்திய வங்கதேச நிலைமை தான் மிகவும் மோசமாகி வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?