Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரிமலையில் குறைந்த தமிழக பக்தர்கள் எண்ணிக்கை.. என்ன காரணம்?

Ayyappan Bhakthargal

Mahendran

, வியாழன், 28 நவம்பர் 2024 (18:30 IST)
பொதுவாக சபரிமலையில் வரும் பக்தர்களில் தமிழக பக்தர்களே அதிகம் காணப்படும் என்ற நிலையில், தற்போது தமிழக பக்தர்களின் எண்ணிக்கை சில நாட்களாக குறைவாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நேற்றும் இன்றும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, 5 வரிசைகளில் மட்டுமே பக்தர்கள் இருந்ததாகவும், அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் காத்திருக்காமல் நேராக 18 படி ஏறிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவானதற்கு தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைவதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரை செல்லும் நாளை ஒத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மழை மற்றும் புயல் அச்சம் நீங்கிய பிறகு, மீண்டும் சபரிமலையில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2025ல் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் வழிபட வேண்டிய கும்பகோண பரிகாரக் கோயில்கள்! | 2025 New Year Astrology Horoscope