பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியவர்கள்தான் குறைக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கறாராக பேசியுள்ளார்.
சமீப காலமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசுகள் தங்கள் வரி விகிதத்திலிருந்து குறைத்து வருகின்றன.
இந்நிலையில் தெலுங்கானாவிலும் பெட்ரோல் விலையை குறைக்க கோரி முதல்வருக்கு பலரும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ் “பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தெலுங்கானா உயர்த்தவே இல்லை. அப்படியிருக்கும்போது எங்களை வரியை குறைக்க சொல்ல முடியாது. வரியை உயர்த்திய முட்டாள்தான் குறைக்க வேண்டும்” என கறாராக பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.