Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கானாவில் மேகவெடிப்பு; வெளிநாட்டு சதியா? – முதல்வர் சந்தேகம்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (11:20 IST)
தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மேகவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு சதி உள்ளதா என தெலுங்கானா முதல்வர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த சில வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பத்ராசலம் என்ற பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் ஊரே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் அப்பகுதி 70 அடி நீரில் மூழ்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வெள்ளப்பெருக்கு குறித்து பேசியுள்ள தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் “இந்த மேகவெடிப்பு என்பது புதிய நிகழ்வாக உள்ளது. இதற்கு முன்னர் காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் நடந்தது. இப்போது தெலுங்கானாவில் நடந்திருக்கிறது. இது வெளிநாடுகளின் சதியாக இருக்கலாம் என்றும் எங்களுக்கு செய்தி வருகிறது. இதில் எது உண்மையென்று தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments