கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வேலூரில் இந்த நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் அந்த பகுதியில் 75 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் எதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
பெங்களூரில் சுமார் 521 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியா முழுவதும் சுமார் 8,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.