Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருப்பு பூஞ்சை நோய் தொற்றின் மருந்துகளுக்கான தட்டுப்பாடு எப்போது தீறும்?

கருப்பு பூஞ்சை நோய் தொற்றின் மருந்துகளுக்கான தட்டுப்பாடு எப்போது தீறும்?
, வியாழன், 27 மே 2021 (12:52 IST)
கருப்பு பூஞ்சை நோய் தொற்றின் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஜூலை மாத வாக்கில் சரி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மறுபுறம் கரும்பூஞ்சை தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரும்பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வர்தா நிறுவனத்தின் ஆம்போடெரிசின் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மருந்திற்கான விலை ரூ.2,100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த மருந்து விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் 11,000 த்துக்கு மேற்பட்டோருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
ஆனால் அவர்களுக்கு தேவையான லிபோஸோமல் ஆம்போடெரிசின் பி வகை மருந்துக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த ஆம்போடெரிசின் மருந்தை, பாரத் சீரம் மற்றும் வேக்சின், பிடிஆர் மருந்து தயாரிப்பு நிறுவனம், சன் ஃபார்மா, சிப்லா, லைஃப்கேர் இன்னவேஷன் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.தற்போது இதன் தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, புதிய நிறுவனங்கள் இந்த மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இதன் தயாரிப்பு துவங்கினால் அதன் பின்னர் இதன் தட்டுப்பாடு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் அதே ஸ்கூலில்.... ரெண்டு பெண் குழந்தைகளுக்கு - PSBB சர்ச்சை குறித்து அஷ்வின்!