Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாருக்கெல்லாம் மாதவிடாய் ? – மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த ஆசிரியைகள் !

யாருக்கெல்லாம் மாதவிடாய் ? – மாணவிகளின் உள்ளாடைகளை சோதனை செய்த ஆசிரியைகள் !
, ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (08:51 IST)
போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மாணவிகள்

குஜராத்தில் உள்ள ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவிகளுக்கு மாதவிடாயா என்பதை சோதனை செய்ய ஆசிரியைகள் அவர்களின் உள்ளாடைகளை சோதனை செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் பகுதியில் உள்ளது ஸ்ரீ சகஜானந்தா பெண்கள் தொழிற்பயிற்சி நிலையம். இது அங்குள்ள ஒரு கோவில் ட்ரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த தொழில்பயிற்சி மையத்தில் பல மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

அதில் மிக முக்கியமான ஒன்று மாதவிடாய் நாட்களில் மாணவிகள் சக மாணவியரி தொட்டு பேசக்கூடாது மற்றும் எல்லோருடனும் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது போன்றவை. ஆனால் இவற்றை சில மாணவிகள் மீறியதாக நிர்வாகத்துக்குப் புகார் சென்றுள்ளது.

இந்நிலையில் வகுப்பறைக்கு சென்று அங்கிருந்த மாணவிகள் அனைவரையும் கழிவறைக்கு சென்று அவர்களுக்கு மாதவிடாய் இருக்கிறதா என ஆசிரியைகள் சோதனை செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் மனஉளைச்சல் காரணமாக போராட்டம் நடத்தினர். இது சம்மந்தமாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை தாமாக முன் வந்து விசாரணை செய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு – அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் !