Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுமுறையில் குடுத்த வீட்டுப்பாடம்.. மறந்துபோன மாணவனை அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்!

விடுமுறையில் குடுத்த வீட்டுப்பாடம்.. மறந்துபோன மாணவனை அடித்து பல்லை உடைத்த ஆசிரியர்!

Prasanth Karthick

, வியாழன், 11 ஜூலை 2024 (12:32 IST)

விடுமுறை நாளில் கொடுத்த வீட்டுபாடத்தை செய்யாமல் வந்த மாணவனை அடித்து பல்லை உடைத்த ஆசிரியர் தலைமறைவான சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது ஆசிப். அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிப் மாணவர்களுக்கு கோடை விடுமுறையின்போது வீட்டுப்பாடங்கள் செய்ய சொல்லி கொடுத்துள்ளார்.

ஆனால் அதை சில மாணவர்கள் செய்யவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஆசிப் விளக்கம் கேட்டபோது ஒரு மாணவன் ஏதோதோ சொல்லி சமாளித்த நிலையில் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஆசிப் அந்த மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மாணவன் மயங்கி கீழே விழுந்து அவனது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், மாணவனின் பல்லும் உடைந்தது.

இதை கண்ட ஆசிரியர் ஆசிப் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவமறிந்து வகுப்பறை வந்த தலைமை ஆசிரியர் மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான ஆசிப்பை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை: ஜெயக்குமார் அறிவிப்பு..!