ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டீ வியாபாரி தனது மகள்களுக்கு ரூ.1.5 கோடி வரதட்சணை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியின் போது லீலா ராம் குஜ்ஜார் எனும் டீ வியாபாரி, மணமகன் வீட்டாருக்கு கட்டுக்கட்டாக பணத்தை வரதட்சணையாக வழங்கியுள்ளார்.
இதையடுத்து, இந்த விவாகாரம் வருமான வரித்துரை கவனத்திற்கு சென்றது. பணம் சம்பாதித்ததன் மூலாதாரம் குறித்து விளக்கமளிக்குமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால் பணம் சம்பாதித்தது தொடர்பான ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், குஜ்ஜார் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார்.
இதனால் தவறான வழியில் சம்பாதித்த பணமா என்ற கோனத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.