Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவை கொலை செய்தது ஓபிஎஸ் பாஜக கூட்டணி?: விகடன் அதிர்ச்சி வீடியோ!

ஜெயலலிதாவை கொலை செய்தது ஓபிஎஸ் பாஜக கூட்டணி?: விகடன் அதிர்ச்சி வீடியோ!

ஜெயலலிதாவை கொலை செய்தது ஓபிஎஸ் பாஜக கூட்டணி?: விகடன் அதிர்ச்சி வீடியோ!
, வியாழன், 13 ஏப்ரல் 2017 (13:42 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. அதிமுக தொண்டர்கள் பலரும் அவரது மரணம் குறித்து விடை தெரியாமல் திகைக்கின்றனர். அரசு சார்பிலும் மக்களின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் விளக்கம் இல்லை.


 
 
இந்நிலையில் அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஓபிஎஸ் அணியினரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து சசிகலா தரப்பையே விமர்சித்து வருகின்றனர்.
 
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட சசிகலா தரப்புக்கு எதிராக ஜெயலலிதாவின் சவப்பெட்டியை வைத்து ஓபிஎஸ் அணி பிரச்சாரம் செய்தது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவை பாஜகவுடன் கூட்டணி வைத்து ஓபிஎஸ் ஏன் கொன்றிருக்க கூடாது என பிரபல தமிழ் வார இதழான விகடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

நன்றி: விகடன்
 
அந்த வீடியோவில் கூறியுள்ளவை, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறைக்கு சென்ற போது ஜெயலலிதா ஓபிஎஸ்ஸை முதல்வராக நியமித்தார். ஜெயலலிதா சிறையில் இருந்த போது அவர் விடுதலை ஆகமாட்டார் என எண்ணிய ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதனுடன் கூட்டு சேர்ந்து கட்சியை தனது கட்டுப்பாடுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார்.
 
அதுமட்டுமல்லாமல் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை தன்னுடைய பினாமி பெயரில் வளைத்து போட்டார் ஓபிஎஸ். ஆனால் ஜெயலலிதா ஒன்றரை மாதங்களில் விடுதலையாகி வந்தார். அப்போது ஜெயலலிதா தான் இல்லாதபோது நடந்தவற்றை பற்றி விசாரிக்க ஆரம்பித்த போது ஓபிஎஸ்ஸின் களவாணித்தனம் வெளிப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதா ஒபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை வீட்டு சிறையில் வைத்தார். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் இது தொடர்பாக அறிக்கை விட்டனர்.
 
மேலும் ஓபிஎஸுக்கு நெருக்கமானவர்கள் பதவியை பறித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை ஓபிஎஸ்ஸை விலக்கியே வைத்திருந்தார். ஜெயலலிதாவை சந்திக்க தன்னை அனுமதிக்கவில்லை என தற்போது கூறும் ஓபிஎஸ், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது ஆட்சி நிர்வாகம் குறித்து ஜெயலலிதா தன்னுடன் ஆலோசித்தார் என ஏன் கூறினார்.
 
ஜெயலலிதா மறைவிற்கு ஓபிஎஸ் உடன் பாஜகவும் கூட்டணி சேர்ந்தது எனவும் இந்த வீடியோ கூறுகிறது. இத்தனை வருடங்களாக தமிழகத்தில் காலூன்ற முடியாத பாஜக ஓபிஎஸ் மூலம் அதனை முயற்சிக்கிறது. ஜெயலலிதா எதிர்த்து வந்த திட்டங்களுக்கு அனுமதி அளித்தது ஏன்?. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை அனுமதிக்காத ஆர்எஸ்எஸ் பேரணியை சென்னையில் நடத்த அனுமதி அளித்தது ஏன்?. தமிழகத்தில் காலூன்ற ஓபிஎஸுடன் கூட்டணி சேர்ந்து பாஜக ஏன் ஜெயலலிதாவை கொன்றிருக்க கூடாது என அந்த விகடன் வீடியோ கேள்வியை எழுப்புகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீரோவின் இதயமும், மோடியின் இதயமும்