Webdunia - Bharat's app for daily news and videos

Install App

52 வார உச்சத்தை அடைந்த டாடா கன்சல்டன்ஸி: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (18:04 IST)
52 வார உச்சத்தை அடைந்த டாடா கன்சல்டன்ஸி: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி பங்குகள் இன்று 52 வார உச்சத்தை அடைந்துள்ளது
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அதில் நிறுவனத்தின் லாபம் 7.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை அறிந்ததும் இந்நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு கொண்டு முதலீட்டாளர்கள் வாங்கினர். இதனால் 3,5 சதவிகிதம் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கின் விலை 3230 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் இந்த காலாண்டின் லாபம் 8727 கோடி என்றும், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான லாபம் 7504 கோடியாக மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மட்டுமின்றி இன்போசிஸ், ஹெச்.சி.,எல், விப்ரோ, டெக் மஹேந்திரா உள்ளிட்ட  நிறுவனங்களின் பங்குகளும் இன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

அடுத்த கட்டுரையில்
Show comments