பறவைக் காய்ச்சல் எதிரொலி – பண்ணைகளை அழிக்க மாநில அரசு உத்தரவு!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (17:54 IST)
இந்தியாவின் இன்னும் கொரோனா வைரஸ் தாக்குதல் முழுமையாகக் கட்டுக்குள் வராமல் மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் சில பகுதிகளில் பறவைகளுக்கு மர்ம வைரஸ் மூலமாக காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழப்பது அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கடும் குளிர் காரணமாக இந்த வைரஸ் பரவுவது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் இதுவரை 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பறவைக் காய்ச்சல் பற்றிய பீதி அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவை காய்ச்சலால் உயிரிழந்தன. அதையடுத்து அந்த கிராமத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எல்லா பண்ணைகளிலும் கோழிகளை அழிக்க சொல்லி அம்மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments