வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மெமோ அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நேரத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வொர்க் ப்ரம் ஹோம் முறை தொடங்கப்பட்டது என்பதும் இந்த முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போதும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வீட்டிலிருந்து பணி செய்யும் ஊழியர்கள் அதன் சலுகைகளை அத்துமீறி உள்ளதாகவும் இதனை அடுத்து விளக்கம் அளிக்க மெமோ அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
டிசிஎஸ் விதித்த நடத்தை விதிமுறைகளை கடைபிடிக்காத வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர்கள் இனி வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் மாதத்தில் 12 நாட்கள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு உற்சாகமான பணியிட சூழலை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அலுவலகம் வரச் சொல்கிறோம் என டிசிஎஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.