மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில் கல்வி தகுதியாக சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் மொழி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து கண்டன அறிக்கையை திமுக தலவரும் எதிர்கட்ட்சி தலைவருமான் முக ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழியும் முதல் மொழியுமான தமிழ் புறக்கணிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்நிலையில் இப்போது மத்திய தொல்லியல் பட்டயப்படிப்புக்கான தகுதிப்பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழி சேர்த்துள்ளது.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது தமிழ் மொழியை சேர்ந்து இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.