Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவிஸ் வங்கியில் யார் யாருக்கு கணக்கு? முடிவுக்கு வரும் ரகசியம்!

சுவிஸ் வங்கியில் யார் யாருக்கு கணக்கு? முடிவுக்கு வரும் ரகசியம்!
, ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (08:26 IST)
சுவிஸ் நாட்டின் வங்கிகளில் இந்தியர்கள் பலர் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வந்தாலும் சுவிஸ் அரசு இதுகுறித்த தகவல்களை வெளியிட மறுத்து வந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அடுத்து சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் யார் யார் கணக்கு வைத்து உள்ளார்கள் என்ற விபரங்களை இந்திய அரசுக்கு அளிக்க சுவிஸ் நாட்டு அரசு சம்மதம் தெரிவித்துள்ளது 
 
 
இதனையடுத்து இன்று இந்தியர்களின் வங்கிக்கணக்கு பட்டியலை சுவிஸ் அரசு தர உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் சுவிஸ் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைத்து இந்தியர்களின் விவரங்களையும் இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு அறிவிக்க முடிவு செய்துள்ளதால் சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார் யார் என்ற விபரங்கள் இன்று தெரியவரும் என்று கூறப்படுகிறது 
 
 
webdunia
கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சுவிஸ் வரித்துறை துணை தலைவர் மற்றும் சர்வதேச நிதித்துறை செயலர் நிக்கோலஸ் மாரியோ தலைமையிலான குழுவினர் டெல்லியில் இந்திய வரித் துறை அதிகாரிகளுடன் இதுகுறித்து நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
சுவிஸ் வங்கியில் இந்திய பிரபலங்கள் யார் யாருக்கு வைத்துள்ளார்கள்? அதில் தமிழக பிரபலங்கள் யார் யார் இருக்கின்றார்கள்? என்ற விவரங்கள் வெளிவரவிருப்பதால், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்து அதில், கருப்பு பணத்தை பதுக்கி வைப்பவர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக மர்மமாக எந்த ஸ்விஸ் வங்கி கணக்குகள் குறித்த விவரம் இன்று இந்திய அரசுக்கு அளிக்கப்பட்ட உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுத் துறை வங்கிகள் இணைப்பு: "வங்கிகளை இணைத்தால் பொருளாதாரம் மேம்பட்டுவிடுமா?"