சண்டிகர் மாநிலத்தில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
சண்டிகர் மாநிலத்தில் தீவிரவாதி போல ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக, சென்று கொண்டிருந்ததாகவும், திடீரென அவர் தனது பையில் இருந்து ஒரு மர்மமான பொருளை எடுத்தபோது, அந்த பொருளை சரியாக எடுக்க தெரியாததால் அந்த பொருள் வெடித்ததாகவும், சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.
அந்த நபர் வெடிகுண்டை வெடிக்க செய்து, பலரை கொல்லும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் என்றும், மேலும் அவர் ஒரு தீவிரவாத இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்ததெல்லாம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு எடுக்கும் போது சரியாக எடுக்காததால் வெடித்து விட்டது என்றும், இதனால் அவர் ஒருவர் மட்டும் உயிரிழந்தார் என்றும், சரியான முறையில் கையாண்டு இருந்தால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.