நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

Mahendran
திங்கள், 27 அக்டோபர் 2025 (19:14 IST)
நாடு முழுவதும் அதிகரித்து வரும் 'டிஜிட்டல் கைது' மோசடி புகார்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
 
ஹரியானாவை சேர்ந்த வயதான தம்பதியினர் மோசடிக்கு உள்ளானது குறித்து அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் நடைபெறும் இந்த சம்பவங்களை மாவட்ட அளவில் விசாரிப்பதை விட, சிபிஐ-க்கு மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நீதிபதிகள் கருதினர்.
 
மோசடி கும்பல்கள் பெரும்பாலும் மியான்மர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
வழக்குகளை விசாரிக்க சிபிஐயிடம் உள்ள தொழில்நுட்ப மற்றும் மனிதவள வசதிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவர்களின் பதிலுக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

மோந்தா புயல்: சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று இரவுக்கான மழை எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் தற்போதைய வாக்காளர் பட்டியல் Freeze செய்யப்படும்: தேர்தல் ஆணையம்..!

'மோந்தா' புயல் கரையை கடக்கும்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.. வானிலை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments