Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடை மேல் தொட்டாலும் அது வன்கொடுமைதான்! போக்சோதான்! – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:03 IST)
ஆடை மேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்கள் போக்சோவில் வராது என்ற மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்கள் முன்னதாக மும்பை உயர்நீதிமன்றம் இளம்பெண்கள், சிறுமிகள் மீது ஆடைமேல் தொட்டு செய்யும் பாலியல் சீண்டல்களுக்கு போக்சோ சட்டத்தில் வழக்கு தொடர முடியாது என உத்தரவிட்டிருந்தது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையில் இன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆடைமேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் அதுவும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என கூறி மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்பி மோக உயிரிழப்பு இந்தியாவில் தான் அதிகம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

செப்டம்பர் முதல் மகளிர் உதவித்தொகை ரூ.2100.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

போலீஸில் புகார் குடுத்தது போலி விஜய் ரசிகரா? - ஆதாரத்துடன் நிரூபித்த தவெகவினர்!?

திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும்.. தேவஸ்தானம் அறிவிப்பு..!

இன்ஸ்டா வைரல் வீடியோ எதிரொலி: கூமாபட்டி மேம்பாட்டு பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு..!

அடுத்த கட்டுரையில்