Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுடன் பேச்சுவார்தை நடத்த குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (14:12 IST)
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஹரியானா பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 49 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்யும் வரை போராட்டம் நீடிக்கும் என விவசாயிகள் ஒரு பக்கமும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு இன்னொரு பக்கமும் பிடிவாதமாக இருப்பதன் காரணமாகவும் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே உள்ளது 
 
இந்த நிலையில் 49 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த குழுவில் அசோக் குலாட்டி, ஹர்சிம்ராட் மன், அனில் கன்வாட், பிரமோத் ஜோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களுக்கு தடை தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

தொழிற்சாலை பாய்லர் வெடித்து தீ விபத்து: 10 பேர் பலி.. 48 பேர் காயம்..!

மனைவியை அபகரித்து சொத்தையும் கேட்ட கட்சி தலைவர்! ஆள் வைத்து கதை முடித்த காங். பிரமுகர்!

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments