வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான சூழல் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து மத்திய அரசுக்கு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி மத்திய அரசு வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்தால், வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய உச்சநீதிமன்றம் தனி குழு அமைப்பதாகவும், அதன்மூலம் விவசாயிகளின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை பரிசீலிப்பதாக போராட்டத்தை திரும்ப பெற செய்வதாகவும் கூறியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு உரிய பதிலை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை வேளாண் சட்டங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.