Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காட்டிக்கொடுத்த ஸ்வெட்டர்... தந்தையை கூறு போட்ட மகள்

Advertiesment
காட்டிக்கொடுத்த ஸ்வெட்டர்... தந்தையை கூறு போட்ட மகள்
, திங்கள், 9 டிசம்பர் 2019 (16:09 IST)
மும்பை முக்கிய கடற்கரைப் பகுதியில் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட பிணம் குறித்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை முக்கிய கடற்கரைப் பகுதியில், காலையில் வாக்கிங் சென்றவர்கள்  சூட்கேஸ் ஒன்று கடல் நீரில் மிதப்பதை கண்டு உள்ளனர். இதனோடு அதிர்ச்சிக்குள்ளாகும் விதமாக அந்த சூட்கேஸில் கால் ஒன்று நீட்டியிருப்பதையும் கண்டுள்ளனர்.  
 
இதனால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, ஆண் நபரின் ஒரு கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை பிளாஸ்டிக் பைக்குள் வைக்கப்பட்டிருந்தது. 
 
இதனால் இட்ந்த சம்பவத்தை வழக்கு பதிவு செய்து கொலையான நபர் யார் என போலீஸார் விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும் அந்த நபரின் தலையையும் மீத உடல் பாகங்களையும் தேடி வந்தனர். ஆம், சடலத்தின் மீது இருந்த 2 சர்ட்கள், ஒரு பேண்ட் மற்றும் ஸ்வெட்டரை வைத்து தற்போது அந்த நபர் யார் என்பதையும் கொலையாளி யார் என்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். 
 
சடலமாக கிடந்த நபரின் பெயர் பெனட் ரிப்பலோ. இவரது வளர்ப்பு மகள் ஆரத்யா. இவர்தான் தந்தையை கொன்றுள்ளார். தனது காதலை கண்டித்தற்காகவும் பாலியல் தொல்லை கொடுத்தற்காகவும் ஆரத்யா தனது ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்துள்ளார். தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஸ் போட்ட திருமா... அடுத்தடுத்த நெருக்கடியில் அதிமுக!