பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி: செயற்கைக்கோள் புகைப்படம்!
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பலர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பனிக்கட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட இடிபாடுகளில் மிக அபாயகரமான ஏரி ஒன்று திடீரென உருவாகி உள்ளதாக தெரிகிறது. செயற்கைக்கோள் புகைப்படத்தில் இது தெளிவாக தெரிவதால் இந்த திடீர் ஏரி உடைந்து விடாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் உருவாகியுள்ள இந்த பனிக்கட்டி ஏரி, பனிக்கட்டி உடைந்ததால் ஏற்பட்ட திடீர் ஏரி என்பது செயற்கைகோள் புகைப்படம் தற்போது உறுதி செய்துள்ளது