உத்தரகாண்ட் பனிச்சரிவால் குகைப்பாதையில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்க ராணுவம் களமிறங்கியுள்ள வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் பனிச்சரிவு ஏற்பட்டதால் உருவான வெள்ளத்தில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. சுமார் 150 பேர் மயமாகியுள்ள நிலையில் 29 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சமோலி சுரங்க பாதையில் பணியில் இருந்த ஊழியர்கள், மக்கள் என சுமார் 35 பேர் அதற்குள் சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்களை மீட்க சுரங்கத்திற்கு இந்திய ராணுவம் நுழைந்துள்ளது. அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.