திமுக தலைவர் முக ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞரணி தலைவராக பொறுப்பேற்று கொண்ட நிலையில் இன்று சென்னையில் அவருடைய தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உதயநிதி தலைமையில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது
அதன்பின்னர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தபால் & ரயில்வே துறையில் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகத்தில் அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது
தேசிய கல்விக்கொள்கை வரையறையை திரும்பப்பெற வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒரு முறை திமுக இளைஞரணியின் மண்டல மாநாடு நடத்தப்பட்டு பின்னர் மாநில மாநாடு நடத்தப்படும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டது
மேலும் திமுக இளைஞரணி உறுப்பினர்களின் வயது வரம்பு 35 வரை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும், 30 லட்சம் பேர்களை இளைஞரணியில் சேர்ப்பது என்றும் இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது