Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்!

சிறுமியை காவல் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2017 (11:36 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்த ஏழு வயது சிறுமியை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தூக்கிச்சென்று காவல் நிலையத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கெம்ரி நகரின் அருகே பன்வர்க்கா பகுதியில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் வெளியே ஏழு வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார்.
 
அப்போது குடிபோதையில் வந்த தாஜ்வீர் சிங் என்ற சப் இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்துக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமியின் சத்தத்தை கேட்டு வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இது குறித்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து அந்தச் சிறுமியை மீட்டனர். மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்தனர். பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அந்த சப் இன்ஸ்பெடர் கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்