Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்கரவாதிகள் ஊடுருவல்: சுரங்க பாதையை தகர்த்த ராணுவம்!!

Advertiesment
பங்கரவாதிகள் ஊடுருவல்: சுரங்க பாதையை தகர்த்த ராணுவம்!!
, ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (13:37 IST)
ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு காணப்பட்ட சுரங்க பாதையை தகர்த்துள்ளனர்.


 
 
ஜம்மு காஷ்மீர் அர்னியா என்ற பகுதியில் டமலா நலா என்ற அடர்ந்த வனப்பகுதி உள்ளது. எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபடுகின்றனர். 
 
அப்போது அங்கு ஒரு சுரங்கபாதை இருப்பதை கண்டுபிடித்தனர்.  பாகிஸ்தான் பகுதியில் இருந்து சுரங்கம் தோண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
சுமார் 14 அடி நீளத்திற்கு அந்த சுரங்கப்பாதை இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த சுரங்கம் மூலம் காஷ்மீருக்குள் ஊடுருவி, தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி விட்டு அதே வழியாக தப்பி செல்ல திட்டமிட்டது தெரிகிறது. 
 
இதையடுத்து காஷ்மீர் எல்லை முழுவதும் ரகசிய சுரங்கங்கள் இருக்கின்றனவா என்பதை அறிய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலுடன் கை கோர்க்கலாமா; காங்கிரஸுக்கு டாட்டா சொல்லலாமா: குழப்பத்தில் குஷ்பு!