ஆன்லைன் தேர்வுகள் நடத்தக் கோரி அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள்!
ஆன்லைன் தேர்வுகள் நடத்த கோரி மகாராஷ்டிரா மாநில பள்ளி மாணவர்கள் திடீரென அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்தது
இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் இணையவழி தேர்வுதான் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீட்டை திடீரென மாணவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனையடுத்து காவல்துறையினர் மாணவர்களை சமாதானப்படுத்தியும் மாணவர்கள் அங்கிருந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி மாணவர்களை விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இணைய வழியாக தேர்வு நடத்த வேண்டுமென திடீரென மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது