Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீன் பிரியாணி சாப்பிட்ட மாணவி பலி

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (13:15 IST)
சென்னையை சேர்ந்த அனாமிகா என்ற மாணவி, ஏர்ணாகுளத்தில் சுற்றுலாக்கு சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
சென்னை சேர்ந்த பிளஸ்- 1 படிக்கும் மாணவி அனாமிகா. தனது பெற்றோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடிபெயர்ந்து எர்ணாகுளத்திற்கு சென்றார்.
 
இந்த நிலையில் நேற்று அந்த மாணவி தனது பெற்றோருடன் அங்கு சுற்றுலாக்கு சென்றார். அப்போது அவருக்கு பசி எடுத்துள்ளது. அதனால் அங்குள்ள ஓட்டலில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் மாணவிக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
 
இதனால் அந்த மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மாணவி செம்மீன் பிரியாணி சாப்பிடத்தால் ஏற்பட்ட அலர்ச்சியால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments