சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் மோடியில் வெளிநாட்டு பயணம் குறித்து, உள்நாட்டு பிரச்சனைகளுக்கு வெலிநாட்டில் கருந்து கூறுவது குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
அந்த நாளேட்டில் எழுதப்பட்டிருந்தது பின்வருமாறு, மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு 5 நாட்கல் பயணம் மேற்கொண்டார். ஆனால், உள்நாட்டில் நடந்த எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்கவில்லை.
வெளிநாடு சென்று உள்நாட்டு பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவிக்கிறார். உள்நாட்டு பிரச்சனைகளை வெளிநாட்டில் பேசுவதால் யாருக்கு என்ன பயன்?
அவர் வெளிநாடுகளில்தான் பேசுவார் என்றால், இந்தியாவின் தலைநகரை லண்டன், பாரீஸ், நியூயார்க் ஆகிய இடங்களுக்கு மாற்றி விடலாம். அப்படி இல்லை என்றால் அவரின் அலுவலகத்தை மாற்றிவிடலாம்.
பேசாமல் இருப்பதாக மன்மோகன் சிங்கை குற்றம் சாட்டிய மோடி, தற்போது மவுன பாபாவாக இருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய ஆட்சி காலத்தில் பாதி அளவு பேசினார். ஆனால், மோடி பிரச்சனைகளை வேடிக்கை பார்க்கும் மவுன பாபாவாக இருக்கிறார்.
உள்நாட்டு பிரச்சனைகளை மோடி வெளிநாடுகளில் விமர்சிப்பது சரிதானா? இந்தியாவுக்கு இது அவபெயர் கிடையாத என பல கேள்விகள் மூலம் மோடியை கிழித்து தொங்கவிட்டிருக்கின்றனர் சிவசேனா கட்சியினர்.