Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கொடுமையால் மாணவி தற்கொலை!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:44 IST)
கேரள மாநிலத்தில் வரட்சணை கொடுமையால்  சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த மாணவி மோபியா பர்வீன். இவர் தொடுபுழாவில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.  அவருக்கு ஃபேஸ்புக்கில் முகமது சுஹைல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது காதலாக மலரவே இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் திருமணம் முடிந்த சில நாட்களில் சுஹைல் பர்வீனிடம் தான் சினிமா எடுக்கவுள்ளதாகவும் அதற்கு ரூ.40 லட்சம் தேவைப்படுவதாக கூறி அதை உன் தந்தையிடம் வரதட்சணையாக வாங்கி வரும்படி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து பர்வீன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.  இப்பிரச்சனை பெரிதாகவே பர்வீன் வீட்டிற்கு வந்து ஒரு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அந்தக் கடிதத்தில் தனது சாவுக்கு கணவர் சுஹைலும் அவரது பெற்றோரும் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து போலீஸார் சுஹைலையும் அவரது பெற்றோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments