Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைநிறுத்த போராட்டம்; 4 நாட்கள் முடங்கும் வங்கி சேவைகள்?

Prasanth Karthick
செவ்வாய், 18 மார்ச் 2025 (09:14 IST)

பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் வங்கிகள் 4 நாட்களுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 23ம் தேதி நள்ளிரவு முதல் 25ம் தேதி நள்ளிரவு வரை 48 மணி நேரத்திற்கு 8 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

 

பொதுவாக மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். அந்த வகையில் 22ம் தேதி சனிக்கிழமை வங்கி விடுமுறை. அடுத்த நாளான ஞாயிற்றுக் கிழமையும் வங்கி விடுமுறை. தொடர்ந்து 2 நாட்கள் போராட்டத்தை கணக்கில் கொண்டால் வங்கிகள் 4 நாட்களுக்கு விடுமுறையில் இருக்கும். இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். மாத கடைசி என்பதால் வங்கி சேவைகளை மக்கள் அதிகம் நாட வேண்டிய அவசியம் இருக்கும் என கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பேசியுள்ள வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரூபம் ராய், நாங்கள் போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும், சிரமங்களை பொறுத்துக் கொண்டு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments