Publish Date: Wed, 29 Nov 2023 (08:29 IST)
Updated Date: Wed, 29 Nov 2023 (08:32 IST)
வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்த இரண்டு குற்றவாளிகளிடம் விசாரணை செய்த போது விளையாட்டுக்காக கல் எறிந்ததாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
வந்தே பாரத் ரயில் மீது தொடர்ச்சியாக கல் எறியும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாவட்டம் மேராமண்டலி - புதாபங்க் இடையே உள்ள பகுதியில் கடந்த 26 ஆம் தேதி புவனேஸ்வர் நோக்கி வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது இரண்டு நபர்கள் வந்தே பாரத் ரயில் மீது கல் எறிந்தனர் இதனால் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்ணாடி சேதமடைந்தது. இதனை அடுத்து அந்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தபோது தாங்கள் மது போதையில் இருந்ததாகவும் விளையாட்டுக்காக ரயில் மீது கல் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. வந்தே பாரத் ரயில் மீது விளையாட்டுக்காக கல் எறிந்தேன் என்று இரண்டு குற்றவாளிகள் வாக்குமூலம் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.