Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது நல்லதல்ல - ராகுல்காந்தி விமர்சனம்

Advertiesment
ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது நல்லதல்ல - ராகுல்காந்தி விமர்சனம்
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:32 IST)
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசுக்கு ரிசர்வ் பேங்க் 1,76,05 கோடி ரூபாய் வழங்க சம்மதித்துள்ளதாக அறிவித்துள்ளது.  இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ரிசர்வ் வங்கியின் பணத்தை திருடுவது பலனளிக்காது என கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையிலானக் குழுவின் பரிந்துரையை ஏற்று ரிசர்வ் பேங்க் மத்திய அரசுக்கு 1,76,51 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு அளிக்க முன் வந்துள்ளது. தேர்தலுக்கு முன்னராகவே மத்திய அரசு இந்தத் தொகையைக் கேட்டதாகவும் அதற்கு அப்போது ரிசர்வ் வங்கி மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர் . மேலும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால் பல லட்சம்  தொழிலாளர்கள் வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதை சமாளிக்கவே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ரூ. 1. 76 லட்சம் கோடியை மத்திய அரசிடம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு ராகுல்காந்தி கடுமையான விமர்சித்துள்ளார். அதில், பிரதமரும், நிதி அமைச்சரும்  தங்களால் உருவாகியுள்ள பொருளாதார பேரழிவை சரிசெய்வது எப்படி என தெரியாமல் உள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கியிலிருந்து பணத்தை திருடுவது பலனளிக்காது எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலதிகாரியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரர் – பல்லாவரத்தில் அதிர்ச்சி சம்பவம் !