Publish Date: Fri, 20 Dec 2024 (09:29 IST)
Updated Date: Fri, 20 Dec 2024 (09:32 IST)
இந்த வாரத்தில் நான்கு நாட்களுமே பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. எனவே, இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து பெரும் நஷ்டத்தை உண்டாக்கிய நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில், இன்றும் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிகள் சரிந்து 79,061 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 23,926 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி, டாட்டா மோட்டார்ஸ், டிசிஎஸ், மற்றும் டைட்டான் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், டாட்டா ஸ்டீல், சன் பார்மா, ஸ்டேட் வங்கி, இண்டஸ் இன்ட் வங்கி, இந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
Siva
Publish Date: Fri, 20 Dec 2024 (09:29 IST)
Updated Date: Fri, 20 Dec 2024 (09:32 IST)