எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

Mahendran
செவ்வாய், 10 ஜூன் 2025 (14:54 IST)
ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, "எங்களுக்கு ஜியோ, ஏர்டெல் சேவை போதும்" என்று பலர் கருத்து தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்டார்லிங்க் சேவை பெற வேண்டுமானால் அதற்கான டிவைஸ் வாங்க வேண்டும் என்றும், அதன் விலை 33 ஆயிரம் ரூபாய் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும், இதுதான் குறைந்த விலை என்றும் கூறப்படுகிறது. 
 
ஏற்கனவே ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் எந்த விதமான டிவைஸ் கட்டணமும் பெறாமல் குறைந்தபட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற கட்டணத்தை வைத்திருக்கும் நிலையில், 33 ஆயிரம் ரூபாய் டிவைஸ் மற்றும் 3000 ரூபாய் குறைந்தபட்ச ரீசார்ஜ் என்பது நமக்கு கட்டுப்படியாகாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் கடும் போட்டிக்கு இடையே இவ்வளவு பெரிய கட்டணத்துடன் அறிமுகமாகும் ஸ்டார்லிங்க், பொதுமக்களின் ஆதரவைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments