Publish Date: Sun, 21 Nov 2021 (14:21 IST)
Updated Date: Sun, 21 Nov 2021 (14:24 IST)
பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நின்றுகொண்டு பயணம் செய்ய பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனை அடுத்து பேருந்துகளில் மற்றும் மெட்ரோ ரயில்களில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து உள்ளதை அடுத்து நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் பேருந்துகளி, மெட்ரோ ரயில்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.