Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் .. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்..!

Advertiesment
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் .. இஸ்ரோ  தலைவர் சோம்நாத் தகவல்..!

Siva

, வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:20 IST)
SSLV-D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி SSLV-D3 என்ற ராக்கெட் சற்று முன்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
 
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்று பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்தது என்றும் இந்த ராக்கெட்டில் 165 கிலோ கொண்ட மூன்று ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயல்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இஸ்ரோ வெற்றிகரமாக SSLV-D3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

24 இடங்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு..? ஒன்னு கூட வெடிக்கல! - சுதந்திர தின விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!