இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை கலைக்கவில்லை என்றும், சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய மல்யுத்த சம்மேளனம் விளையாட்டு அமைப்பாக செயல்படும் என்றும், அது முறையான விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கிய பிரிஜ் பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனம் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் உத்தரப்பிரதேசம் கோண்டா நகரில் தேசிய அளவிலான U15, U20 போட்டிகள் இம்மாத இறுதியில் நடக்கும் என சம்மேளன தலைவர் சஞ்சய் சிங் அறிவித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய மல்யுத்த சம்மேளனம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.