Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva
ஞாயிறு, 11 மே 2025 (10:55 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்தியாவை பொருத்தவரை, வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை என இரண்டு பருவ மழைகள் மாறி மாறி பொழிந்து வருகின்றன.
 
இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 27ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில், தமிழகத்தில் வெப்பம் இன்னும் சில நாட்களுக்கு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நேற்று தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, திருத்தணி, திருச்சி, தர்மபுரி ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.
 
இன்று முதல் 13ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, அதாவது இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments