Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலம்பம் பாட்டிக்கு அடித்தது யோகம்: சிலம்ப பயிற்சி பள்ளியின் ஆசிரியர் ஆகிறார்

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2020 (15:55 IST)
சிலம்பம் பாட்டிக்கு அடித்தது யோகம்
கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப்களில் 70 வயது மூதாட்டி ஒருவர் அற்புதமாக சிலம்பம் சுற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக நேர்த்தியாக சிலம்பம் விளையாடுகிறார் என்று அனைவரும் வியந்தனர். இந்த நிலையில் நடிகர் சோனு சூட் அந்த வீடியோவை பார்த்து வியந்து அந்த பாட்டி குறித்த ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் அவரை வைத்து சிலம்பம் பயிற்சி பள்ளி ஒன்றை அமைக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் 
 
இதனையடுத்து அவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் சொந்த ஊர் புனே என்றும் நெட்டிசன்கள் கண்டுபிடித்து தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்னொரு பாலிவுட் நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கும் அந்த மூதாட்டியின் தகவல்களை திரட்டி அவருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார்.
 
விரைவில் நடிகர் சோனு சூட் ஒரு சிறிய சிலம்ப பயிற்சி பள்ளி தொடங்க உள்ளதாகவும் அந்த பயிற்சி பள்ளிக்கு அந்த மூதாட்டி தான் ஆசிரியராக இருந்து இளம் பெண்களுக்கு இந்த தற்காப்பு கலையை பயிற்சி அளிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஒரே ஒரு வீடியோ வைரலானதன் மூலம் தற்போது அந்த பாட்டிக்கு யோகம் அடித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் அந்த பாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments