Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோனியா காந்தியின் மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை...

சோனியா காந்தியின்  மருமகனிடம் அமலாக்கத்துறை விசாரணை...
, செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (12:55 IST)
சட்டவிரோதமான முறையில் பணப் பரிவர்த்தனை தொட்ர்பான வழக்கில் 3 முறை டெல்லியில் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜரான சோனியாவின் மருமகனான ராபர்ட் வதேரா தற்பொழுது நில முறைகேடு வழக்கு தொடர்பாக முதல்முறையாக அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஜெய்பூரில் ஆஜராக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதாவது பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ராஜஸ்தான் பிக்கானிர் வட்டத்தில் ராபர்ட் வதேராவுடன் தொடர்புடையதாக கூறப்படும் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம் நில ஒதுக்கீடு பெற்றதாகவும், அதை முறைகேடாக விற்று அதிகபட்ச லாபம் ஈட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
இது சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுபியும் அவர் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் அமாலாக்கத்துறை உத்தரவுக்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை வர்தேரா அணுகினார். 
 
இதனையடுத்து  அவரையும் அவரது தாயாரையும் விசாரணைக்கு ஆஜரகுமாறு நீதிமன்றம் உத்தவிட்ட  நிலையில் ஜெய்பூரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் வதேரா தமது தாயாருடன் விசரணைக்கு ஆஜரானார். அவருடன் அவரது மனைவி பிரியங்கா காந்தியும் வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காணாமல் போன நாய்: துடிதுடித்து போன ஓனர்: என்ன செய்தார் தெரியுமா?