Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி ஈஸியா சொல்லிட்டார்; இவங்க என்ன பண்ண போறாங்களோ? – கலக்கத்தில் நெட்டிசன்கள்

மோடி ஈஸியா சொல்லிட்டார்; இவங்க என்ன பண்ண போறாங்களோ? – கலக்கத்தில்  நெட்டிசன்கள்
, வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (11:27 IST)
ஏப்ரல் 5 அன்று இரவு தீபங்கள் ஏற்ற சொல்லி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் இன்று பிரதமர் மோடி மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு மின்சாரவிளக்குகளை அணைத்து விட்டு வீட்டு வாசல்களில் மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஒளியூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஒருநாள் சுய ஊரடங்கு அறிவித்தபோது மக்களை 5 மணிக்கு கைத்தட்டி, மணியடிக்க சொல்லி கேட்டிருந்தார் பிரதமர். அதை சரியாக புரிந்துகொள்ளாத மக்கள் வீதிகளில் கூடி கைத்தட்டி, பாட்டு பாடி, ஆடி கும்மாளமிட்டு ஊரடங்கு செயல்படுத்தியதற்கான நோக்கத்தையே சிதைத்து விட்டனர். இதுகுறித்து பிரதமர் மோடியே வருத்தப்பட்டு பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரதமர் மோடியின் இந்த விளக்கேற்றும் வேண்டுதலை தொடர்ந்து #Diwali என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. மக்கள் பலர் வழக்கம்போல அவர் சொல்ல வந்ததை சரியாக புரிந்துகொள்லாமல் ஏப்ரல் 5 அன்று ஒன்றுகூடி தீபாவளி கொண்டாடி விடுவார்களோ என்ற பதட்டம் சிலருக்கு எழுந்துள்ளது. பிரதமரின் நோக்கத்திற்கு எதிராக மக்கள் ஏதாவது செய்வதை பகடி செய்து இணையத்தில் மீம்களும் உலா வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திணறும் இந்தியா: 2,301-ஐ தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!!