சீனாவிடமிருந்து மாஸ்க் உள்ளிட்ட மருத்துவ உபகரனங்கள் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் டிக்டாக்கை மொபைலில் இருந்து நீக்கி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பித்துள்ள இந்திய அரசு, கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் முகக்கவசம், கவ்ச உடை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வாங்க முயற்சித்து வருகிறது. உள்நாட்டில் சில மருத்துவ உபகரணங்கள் முடிந்தளவு தயார் செய்யப்பட்டாலும், முகக்கவசங்கள் உள்ளிட்டவை அதிகமாக தேவைப்படுவதால் சீனா மற்றும் தென்கொரியாவிடமிருந்து அவற்றை இந்தியா வாங்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அந்நாட்டிலிருந்து மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதில் காலதாமதமும், சிக்கலும் நீடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் கோபமடைந்த இந்திய மக்கள் சிலர் சீன அப்ளிகேசனான டிக்டாக்கை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்கும் போராட்டத்தை ட்விட்டர் வாயிலாக மேற்கொண்டுள்ளனர். #BanTikTokInIndia என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.