Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கி எழுந்த ஸ்மிரிதி இரானி:நடந்தது என்ன?

Advertiesment
பொங்கி எழுந்த ஸ்மிரிதி இரானி:நடந்தது என்ன?
, சனி, 22 ஜூன் 2019 (16:11 IST)
தனது மகளை கேலி செய்த மாணவனை கண்டிக்கும் வகையில், சமூக வலைத்தளத்தில் வெளுத்து வாங்கியுள்ளார் ஸ்மிரிதி இரானி.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், ஸ்மிரிதி இரானி சில நாடகளுக்கு முன்னர் தனது மகளுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை குறித்து ஸ்மிரிதி இரானி மகள் ஜோயிஷ் இரானியின் சக மாணவன் ஜா என்பவர், அந்த புகைப்படத்தில் ஜோயிஷ் இரானி மிகவும் கேவலமாக இருப்பதாக கிண்டல் செய்துள்ளார்.

மேலும் அந்த மாணவன், பள்ளியின் சக மாணவர்களையும், அவ்வாறு கேலி செய்யவும் தூண்டிவுள்ளார். இதனால் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கினார்.

ஆனால், அந்த புகைப்படத்தை நீக்கிய பின்பும், கேலிகளும் கிண்டல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தது.

இதனால் கோபமடைந்த ஸ்மிரிதி இரானி, அந்த மாணவனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டு, ’எனது மகள் கராத்தே மற்றும் பல விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறவர் என்றும், உங்களது கேலி கிண்டலுக்கெல்லாம் அவள் சோர்ந்து போக மாட்டாள்’ என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.

மேலும் அந்த பதிவில், என்றாவது ஒரு நாள் தன்னுடைய மகள் சாதித்து காட்டுவாள் என்றும், அவள் என்னுடைய மகள் என்று பெருமையோடு கூறுவேன் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ கல்லூரிக்கு பின்னால் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் – பீகாரில் அதிர்ச்சி