Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் சிவசேனாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்

Webdunia
ஞாயிறு, 29 செப்டம்பர் 2019 (20:06 IST)
மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலுக்கு சிவசேனா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் உத்தவ்தாக்கரே வெளியிட்டுள்ளார்.
 
 
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சமீபத்தில் நடந்த அமித்ஷா மற்றும் உத்தவ் தாக்கரே சந்திப்பை அடுத்து இந்த கூட்டணி உறுதியானது. இருப்பினும் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
 
இந்த நிலையில் தேர்தலுக்கு சிவசேனா கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து நாளை பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இணையவுள்ளதால் அவர் மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
 
 
மகாராஷ்டிராவில் 288 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments