பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இதனால் பொதுப்பிரிவினர்களுக்கு 10% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதியாகியுள்ளது.
இந்த இட ஒதுக்கீடு மசோதாவிற்கு திமுக உள்பட ஒருசில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்தன. திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சி கூட இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில், இடஒதுக்கீடு அளிக்கும் அளவிற்கு இந்தியாவில் எங்கு வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது? என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு விளையாடுவதாகவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் எந்த பலனையும் தராது என்றும் சிவசேனா கூறியுள்ளது.