Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடச்சல் கொடுக்கும் காங்கிரஸ்; கண்கலங்கிய குமாரசாமி: அடுத்து ராஜினாமாவா?

Advertiesment
கொடச்சல் கொடுக்கும் காங்கிரஸ்; கண்கலங்கிய குமாரசாமி: அடுத்து ராஜினாமாவா?
, வியாழன், 10 ஜனவரி 2019 (15:15 IST)
கர்நாடக முதலைமச்சர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கொடுக்கும் டார்ச்சர் தாக்க முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடகத்தில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டன. இந்நிலையில் எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாத காரணத்தால் காங்கிரஸ் - மஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. 
 
என்னத்தான் கூட்டணி அமைத்தாலும், காங்கிரஸ் மற்றும் மஜக இடையே ஏதோ பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
 
அப்போது குமாரசாமி திடீரென கண்ணீர் விட்டு அழுது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் டார்ச்சரையும் கொடுத்து வருகின்றனர். எனினும் இவற்றை மாநில மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு நான் பொறுத்து கொண்டு போகிறேன் என தெரிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்த சில மாதங்களிலேயே முதல்வர் பதவி என்பது ரோஜா பூ படுக்கை அல்ல, முள் படுக்கை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இப்படியே போனால், இது ராஜினாமாவில் அல்லது கூட்டணி பிளவு ஆகிய எதோ ஒன்றில் போய் முடியும் என கர்நாடக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி எந்த பேட்டைக்கு போனாலும் விஸ்வாசம் வேணும்: நெத்தியடி டாக்