Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழா பெயரில் நாட்டைப் பிளவுபடுத்த முயற்சி: சீதாராம் யெச்சூரி!

Mahendran
வியாழன், 18 ஜனவரி 2024 (12:42 IST)
அயோத்தியில் ராமர் கோவில் திருவிழா என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடப்பது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்  
 
ஒவ்வொரு கட்சிக்கும் சமூக நல்லிணக்கத்தை பேண உரிமை உண்டு என்றும் வகுப்பு வாதமோ, பிரிவினவாதமோ கட்சியின் கொள்கையாக இருக்கக் கூடாது என்றும் கூறிய சீதாராம் யெச்சூரி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா மூலம் நாட்டை பிளவுபடுத்த முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 
 
அரசியல் கட்சிகள் மத அடிப்படையில் இயங்கக்கூடாது என்றும் மத நல்லிணக்கம் மற்றும் அரசியல் அமைப்பின் கொள்கைகளை பாதுகாக்க ஒவ்வொரு கட்சியும் பாடுபட வேண்டும் என்றும் பாஜக இந்த விழாவை உண்மையான சுதந்திரம் நிறைவேறிய கனவு என்று  குறிப்பிடுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

மோசமான சாலைகளுக்கு சுங்க கட்டணம் கிடையாது! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் த.அமல்ராஜ் மருத்துவ சிகிச்சை: ரூ2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு..!

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்.. சென்னை மாநகர காவல்துறை

அடுத்த கட்டுரையில்
Show comments