Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்த சித்தராமையா: வீடியோ இணைப்பு!

Advertiesment
இளம் பெண்ணின் கையை பிடித்து இழுத்த சித்தராமையா: வீடியோ இணைப்பு!
, வியாழன், 18 ஜனவரி 2018 (20:52 IST)
கர்நாடக முதல்வர் சித்தராமையா செல்ஃபி எடுப்பதற்காக இலம் பெண்ணைன் கைப்பிடித்து இழுக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. 
 
பொதுக்கூட்டம் ஒன்றில் தன்னுடன் செல்ஃபி எடுத்த பெண்ணை அருகே நிற்க வைக்கும் வகையில் அந்த பெண்ணை சித்தராமையா இழுத்து உள்ளார். இது சம்மந்தமான வீடியோவை பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். 
 
மேலும், பொது இடத்தில் பெண் மீது கை வைப்பதா என்று தனது கோபத்தை வெளிபடுத்தியுள்ளார் மாளவியா. இந்த நிகழ்வுக்கு பாஜக ஆதரவாளர்கள் மட்டும் சித்தராமையாவை விமர்சனம் செய்துள்ளனர்.
 
ஆனால், டிவிட்டரில் பலர் இதில் தவறு ஏதுமில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். சித்தராமையா அனைவரிடமும் இயல்பாக பழக கூடியவர். அவரது பேத்தி வயது பெண்ணை அருகே நிற்க வைக்க உதவியுள்ளார். ஆனால், அதை தப்பான கண்ணோட்டத்தோடு சித்தரித்துள்ளார் மாளவியா எனவும் கூறியுள்ளனர்.
 
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) இது தேர்தல் நேரம். பாஜக தனது வழக்கமான தரத்தைவிட இப்போது இன்னும் தாழ்ந்து கொள்ளும் என கூறி கிண்டல் செய்துள்ளார். 

நன்றி: செய்திக்கதிர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநோத நோயால் 2 அடி உயரம் குறைந்த இளைஞர்